துளிர் கழகத்தின் இரத்த தான முகாம் கல்முனையில் சிறப்பாக நடைபெற்றது!

கல்முனை துளிர் கழகத்தின் 12 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும், அமரத்துவம் அடைந்த கழக அங்கத்தவர் லோஷாந்த் அவர்களின் 10 ஆவது ஆண்டு நினைவாகவும் கல்முனை துளிர் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்த தான முகாம் கல்முனை இராம கிருஸ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் நேற்று 10 ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது.

கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரமேஸ் மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஒத்துழைப்புடன் காலை 8.30 தொடக்கம் மாலை 4.30 வரை இடம்பெற்றது. இதில் பெருமளவானோர் பங்குபற்றி இரத்த தானம் வழங்கியிருந்தனர்.

கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றிய அங்கத்தவர்கள், கல்முனை பிரதேச விளையாட்டு கழக அங்கத்தவர்கள், துளிர் கழக அங்கத்தவர்கள், ஆலோசகர்கள், மாணவர்கள், சமூக நலன் விரும்பிகள், பிரதேச சமூக நலன் அமைப்புகள், மற்றும் பெண்கள் ஆகியோரின் பூரண ஒத்துழைப்புடன் சிறப்பாக நிறைவு பெற்றது.

இரத்த தானம் வழங்கியவர்களுக்கும் இந்த முகாம் சிறப்பாக நடைபெற ஒத்தழைப்பு வழங்கிய அனைவருக்கும் துளிர் கழகம் நன்றிகளையும் தெரிவித்தனர்.

 

By admin