பாண்டிருப்பு நபர் ஒருவர் வேலைசெய்யும் போது தவறி விழுந்து மரணம்!

மருதமுனை பிரதான வீதியிலுள்ள வீடு ஒன்றில் பெயின்ட் பூச மாடிவீட்டின் உயரத்திற்கு ஏறிய பாண்டிருப்பை சேர்ந்தவர்  இன்று(10) தவறுதலாக கீழே விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

56 வயதுடைய பாண்டிருப்பு -02  பாரதி வீதியில் வசிக்கும் ஆறுமுகம் தயாபரன் என்ற நபரே இவ்வாறு பரிதாபதாக மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதானது…

மருதமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடத்தில் இன்று காலை பெயின்ற் வேலை செய்துகொண்டிருக்கும்போது  தவறிவிழுந்து மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  உடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பபபட்டுள்ளதுடன்  கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin