சிறந்த நடிகையின் ஆஸ்கர் விருது களவு: திருடனைக் காட்டிக்கொடுத்தது பேஸ்புக் நேரலை!

மார்ச்.6- ஆஸ்கர் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.  சிறந்த நடிகை (திரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி படத்தில்) நடித்த பிரான்சஸ் மிக்டார்மண்ட்டுக்கு  வழங்கப்பட்டது. ஆனால் கொஞ்ச நேரத்தில்லேயே அந்த விருது களவாடப்பட்டு விட்டதால் அதிர்ச்சி அடைந்ததார் நடிகை.

ஆஸ்கர் விருது விழா முடிந்ததும் இரவு விருந்து நடந்தது. இதில் ஹாலிவுட் பிரபலங்கள், விருது பெற்றவர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விருந்து முடிந்து பார்த்தால், பிரான்சஸின் ஆஸ்கர் விருதைக் காணவில்லை. அவர் அங்கும் இங்கும் தேடினார். எங்கும் கிடைக்கவில்லை. கதறி அழத்தொடங்கிவிட்டார் பிரான்சஸ்.

அங்கிருந்தவர்களுக்கும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரித்து, டெர்ரி பிரையண்ட் (வயது 47) என்பவரைக் கைது செய்தனர்.

விருந்துக்கு டெர்ரிக்கும் அழைப்பு வந்திருந்தது. அங்கு வந்த அவர், போதையில் பிரான்சஸின் ஆஸ்கர் விருதைக்  களவாடிக் கொண்டு போனது மட்டுமின்றி அதை பேஸ்புக்கில் நேரலை செய்துள்ளார்.

இது எனக்கு இசைக்காகக் கிடைத்திருக்கிற விருது” என்று கூறிக்கொண்டே அங்கிருந்த ஹாலிவுட் பிரபலங்களுடன் அவர் நடமாடிக் கொண்டிருந்தார். “இது எனக்கு கிடைத்த விருது..”  எனத் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார். சந்தேகமடைந்த போலீசார், அவரைக் கைது செய்து விசாரித்தனர்.  திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, பிரான்சஸும் அவரது ஆஸ்கர் விருதும் மீண்டும் மகிழ்ச்சியாக இணைந்தனர் அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்       டுள்ளன. கைதான டெர்ரி பிரையண்ட் சமையல் பற்றி எழுதும் எழுத்தாளர் எனக் கூறப்படுகிறது.