சீன-இலங்கை நல்லுறவு மேலும் முன்னேறும் :இலங்கைஇலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவிப்பு..

இலங்கைக்கான சீனத் தூதர் சேங்சுயேயுவான் இலங்கை வெளியுறவு அமைச்சர் திலக் ஜனகா மரபனாவை நேற்று சந்தித்து கலந்துரையாடினார் . இரு நாட்டின் அரசியல், வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவு, சர்வதேச மற்றும் பிரதேச ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

சீன-இலங்கை உறவுக்கு சீனா பெரும் முக்கியத்துவமளித்து வருகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுக்கோப்பில் இலங்கையுடன் பெரிய திட்டப்பணிகளின் ஒத்துழைப்பை விரைவாகச் செயல்படுத்தி இரு நாட்டு மக்களும் பயனடைய வேண்டுமென சீனா விரும்புகிறது என்று சேங் சுயேயுவான் தெரிவித்தார்.

ஒரே சீனா என்ற கொள்கையில் இலங்கை நிலை பிறழாது என்றும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்தில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்கும் என்றும் மரபனா கூறினார்.