அவசரத் திருத்த வேலை காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதென, இலங்கை மின்சார சபையின் பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

இதற்கமைய, அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட கோமாரி கிராமப் பகுதியிலும், இங்கினியாகல மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஹிங்குரானயிலும், மஹாஓயா மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட வஹாவா இருந்து மராவ வரையும் இன்று (09) காலை 08.30 தொடக்கம் மாலை 05 மணி வரை மின் தடைப்படும்.

அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட இலுக்குச்சேனை மற்றும் ஆலங்குளம், அம்பாறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட பாலமுகாம் மற்றும் உதயகிரியாய ஆகிய பிரதேசங்களில் நாளை மறுதினம் (10) காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

பொத்துவில் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட

பாணம மற்றும் பொத்துவில் –  நாளை மறுதினம் காலை 08.30 மணி தொடக்கம் 04.30 மணிவரையும் மின் தடைப்படும்.

அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட வாங்காமம், அலிம் நகர், பாலையடி ஆகிய பிரதேசங்களில் எதிர்வரும் 12ஆம் திகதி காலை 08.30 மணி தொடக்கம் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

battinews

By admin