கல்முனை மாநகர் தரவை சித்தி விநாயகர் ஆலய வீதி தோரணத்திற்கு விசமிகளால் தீ வைப்பு!

கல்முனை மாநகரில்  கல்முனை கல்முனை குடி எல்லையில் அமைந்துள்ள தரவை சித்தி விநாயகர் ஆலய வீதி தோரணத்திற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று நள்ளிரவு (09.03.2018) இடம்பெற்றுள்ளது. இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த இனம்தெரியாத சில தீய விஷமிகளால் இந்த நாசகாரச் செயல் செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த ஆலய வருடாந்த உற்சவதத்திற்காக வீதி அலங்கரிப்பு தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்த தோரணம் ஒன்றுக்கே தீ வைக்கப்பட்டிருந்தது.

தீ வைக்கப்பட்ட விடயம் தொடர்பாக பொலிஸாருக்கும் உடனே அறிவிக்கப்பட்டு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணை செய்தனர்.

இன முரண்பாட்டை ஏற்படுத்த, வேண்டும் என்று மேற்கொள்ளப்பட்ட இந்த விஷமிகளின் நோக்கத்திற்கு இடம் கொடுக்காமல் மக்கள் அமைதி காப்பது அவசியம் என ஆலய முக்கியஸ்த்தர்கள் தெரிவித்தனர்.

By admin