முத்தரப்பு டி 20 தொடரில் இந்தியா – பங்களாதேஷ் இன்று மோதுகிறது .: தோல்வியில் இருந்து மீண்டு வருமா இந்திய அணி……

இன்றைய இந்தியா – பங்களாதேஷ் ஆட்டத்தில் இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த அக்சர் படேல் களமிறக்கப்படக்கூடும். இதேபோல் ஷர்துல் தாக்குருக்கு பதிலாக முகமது சிராஜிக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என கருதப்படுகிறது.

ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் இந்தத் தொடரில் விளையாடாத நிலையில் தற்போது அணியில் இடம் பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் மட்டும் அல்ல கடைசி கட்ட ஓவர்களிலும் ரன் குவிப்பை கட்டுப்படுத்த வேண்டும். அப்போது தான் இந்தியா தோல்வியிலிருந்து மீள முடியும்.

வங்கதேச அணியை மஹ்மதுல்லா வழிநடத்த உள்ளார். அந்த அணி தனது உள்நாட்டில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம், டி 20 தொடர், டெஸ்ட் தொடர் ஆகியவற்றை இலங்கை அணியிடம் இழந்த நிலையில் தற்போது முத்தரப்பு டி 20 தொடரை அணுகுகிறது.

அந்த அணியின்தமிம் இக்பால் கூறுகையில், “எனக்கும், எங்களது அணிக்கும் இலங்கையில் வித்தியாசமான சவால் இருக்கிறது.சில சந்தர்ப்பங்களில் நாங்கள் அதிகம் பயந்துவிடுகிறோம் என்றே கருதுகிறேன். ஒரு அணியாக நாம் அதை கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த அக்சர் படேல் களமிறக்கப்படக்கூடும். இதேபோல் ஷர்துல் தாக்குருக்கு பதிலாக முகமது சிராஜிக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என கருதப்படுகிறது.