இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு தாற்காலிகத் தடை…

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு 10 நாட்களுக்கு இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.. அதே சமயம் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்திகள் பரவுவதால் வன்முறை மேலும் தீவிரமடையும் சூழல் உள்ளது.

இதனால் நாட்டின் பாதுகாப்பையம் அமைதியையும் கருத்தில் கொண்டு பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட தளங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், மொபைல் சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ..

வெறுப்புணர்வுப் பிரசாரங்களை கட்டுப்படுத்துவதற்காகவே ஃபேஸ்புக் உட்பட சமூக ஊடகங்களை பல இடங்களில் முடக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனரட்ண செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.