அமெரிக்கா : அமேரிக்க அதிபர் டிரம்பின் அதிகாரத்தில் குழப்பம் . டிரம்பின் தலைமை பொருளாதார
ஆலோசகர் கேரி கோன்( Gary Cohen )  நிர்வாகத்திலிருந்து ராஜினாமா……

அமெரிக்க அதிபர் டிரம்பின் தலைமை பொருளாதார ஆலோசகர் கேரி கோன் (வயது 57). இவர் கோல்ட்மேன் சச்ஸ் வங்கியின் தலைவர் பதவி வகித்தவர். தாராளமயமாக்கப்பட்ட வர்த்தகத்துக்கு ஆதரவாளராக திகழ்கிறார்.

கடந்த ஆண்டு, ஜனாதிபதி டிரம்ப் அங்கு வரி சீர்திருத்தங்கள் கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தவர், கேரி கோன் என்பது குறிப்பிடத்தக்கது .
ஆரம்பத்தில் இருந்தே இருவருக்கும் இடையில் சுமுகமான நெருக்கம் இருந்திருக்கவில்லை இந்த நிலையில் கேரி கோன் திடீரென ராஜினாமா செய்யப்போவதாக அறிவிப்பு அறிக்கையை வெளியிட்டு உள்ளார்… அதில் அவர் தனது பதவி விலகலுக்கு என்று குறிப்பிட்ட காரணம் எதையும் குறிப்பிடவில்லை.

‘‘அமெரிக்க நாட்டுக்காக உழைப்பதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பை ஒரு கவுரவமாக நான் கருதுகிறேன். அமெரிக்க மக்களுக்கு நல்ல பல பலன்கள் அளிக்கத்தக்க விதத்தில் வளர்ச்சிக்கு உகந்த பொருளாதார கொள்கைகளை கொண்டுவர உழைத்தேன். குறிப்பாக வரலாற்று சிறப்புமிக்க வரி சீர்திருத்தங்கள் கொண்டுவருவதில் முக்கிய பங்கு ஆற்றினேன்’’ என அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20–ந் தேதி பதவி ஏற்றதைத் தொடர்ந்து, அங்கு நிர்வாகத்தை மாற்றி அமைத்தார்.

அதைத் தொடர்ந்து பதவி விலகும் 23–வது முக்கிய நபர் என்ற பெ