அவசரகால நிலையின் போது சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள அவசரகால நிலை தொடர்பில் பொதுமக்களுக்கு நன்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவன் குணசேகர தெரிவித்தார்.

இந்த அவசரகால நிலையின் போது சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரு.குணசேகர மேலும் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே திரு.குணசேகர இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தல் , பொய்யான தகவல்களை பரப்புதல் , சமூக வலைத்தளங்களில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் விடயங்களை பகிர்தல் போன்ற விடயங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படும் என்பதுடன் கைது செய்யப்படுபவர்களுக்கு வழக்கு விசாரணை முடியும் வரை பிணை வழங்கப்படாது. அத்துடன் அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 வருட சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

சமகளம்

By admin