கல்முனை வைத்தியசாலைச் சேர்ந்த   இருவர் விபத்து: அதே வைத்தியசாலையில் அனுமதி: கால் உடைந்தவர் மட்டு.விற்கு இடமாற்றம்!
(காரைதீவு நிருபர்)

கல்முனை ஆதார வைத்தியசாலையைச் சேர்ந்த இருவர்   இருவேறு சம்பவங்களில் விபத்துக்குள்ளாகி அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பங்கள் இரண்டும் மருதமுனையில் இடம்பெற்றுள்ளது. இரண்டும் மோட்டார்சைக்கிள் விபத்துக்களாக பதியப்பட்டுள்ளது. கல்முனைப்பொலிசார் விசாரணைசெய்துவருகின்றனர்.

முதலாவது விபத்து !

கல்முனை ஆதாரவைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினரும் வைத்தியசாலை ஒப்பந்தகாரருமான  சந்திரசேகரம் ராஜன் நேற்றுமுன்தினம் (5) திங்கள் மாலை 6.10 மணியளவில் மருதமுனையில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.

கல்முனை மாநகரசபைக்கான உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புசார்பில் கல்முனை 12ஆம் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சந்திரசேகரம் ராஜன் எதிர்வரும் 20ஆம் திகதி மாநகரசபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவிருந்த நிலையில் இவ்விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதால் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

அதனால் அவரது இடதுகால் முறிந்துள்ளது.அதைவிட 3இடங்களில் வெடித்துமுள்ளது. மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பிற்கு (6)செவ்வாய் பகல் அனுப்பிவைக்கப்பட்டதாக வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார்.
இவர் இறுதியாக அட்டப்பள்ள இந்துமயான விவகாரத்தில் சிறையில் அகப்பட்ட 21பேரின் விடுதலைக்கான முயற்சியிலீடுபட்டு விடுதலையாகியபின்பு பெரியநீலாவணையிலுள்ள வீட்டுக்குத் திரும்புகையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டாவது விபத்து!
கல்முனை ஆதார வைத்தியசாலையின்  பிரதம இலிகிதராகக்கடமையாற்றும் எஸ்.தேவஅருள் என்பவர் இருதினங்களுக்கு முன் மருதமுனையில் வைத்து விபத்துக்குள்ளானார். கையில் ஏற்பட்ட முறிவு அல்லது எலும்புவிலகலையடுத்து உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போதும் அவர் வார்ட்டில் தங்கியிருந்து சிகிச்சைபெற்றுவருகிறார்.

 

 

 

By admin