பெரியகல்லாறில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப பெண்ணின் சடலமாக மீட்பு மட்டு  சம்பவம்!

-டினேஸ் ,துறையூர் சஞ்சயன்-

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்ப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.எஸ்.பீ.பண்டார தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக  குறித்து மேலும் தெரியவருவதாவது கடன் தொல்லையினால் ஏற்பட்ட குடும்பத் தகராறினால் பெரியகல்லாறு பிரிவு மூன்றில் ஆலையடி வீதியைச் சேர்ந்த சந்திரகுமார் கிந்துஜா 22வயது மதிக்கத்தக்க இளம் குடும்பப் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதிக்கு ஒரு வயதும் ஒரு மாதமுமான நிறம்பிய சிறு குழந்தை இருப்பதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலீஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரித்தார்.

கடந்த ஒரு வார காலமாக வீட்டில் நிலவிய கடன் தொல்லை மற்றும் வீட்டில் நிலவிய குடும்பத் தகராறினேலேயே குறித்த யுவதி நேற்று அதிகாலை (07) இரண்டு மணி வேளையில் தூக்கில் தொங்கியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் குறித்த யுவதியின் உடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பெருங்குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

By admin