முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இலங்கை ரூபா மதிப்பில் 5.75 லட்சம் கோடி : இந்தியப் பெரும்பணக்காரர்கள் போர்ப்ஸ் பட்டியலில் மீண்டும் முதலிடம்

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 585 பேருடன் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. 373 பேருடன் இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. 119 பேருடன் இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் கூடுதலாக 18 பேர் இணைந்துள்ளனர்.

2018ம் ஆண்டிற்கான போர்ப்ஸ் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 72.84 சதவீதம் அதிகரித்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 40.1 பில்லியன் (5.75 லட்சம் கோடி ரூபாய்) டாலர்களாக அதிகரித்துள்ளது. பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 19வது இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார். கடந்த ஆண்டு போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலில் 33 இடத்தில் அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானிக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் 18.8 பில்லியன் டாலர்களுடன் அசீம் பிரேம்ஜி (உலக அளவில் 58வது இடம்) உள்ளார். 18.5 பில்லியன் டாலர்களுடன் (3.10 லட்சம் கோடி ரூபாய்) லட்சுமி மிட்டல் (உலக அளவில் 62வது இடம்) மூன்றாவது இடத்திலும், ஷிவ் நாடார் 14.6 பில்லியன் டாலர்களுடன் (115 ஆயிரம் கோடி ரூபாய்) நான்காவது இடத்திலும் (உலக அளவில் 98வது இடம்), திலிப் ஷாங்வி 12.8 பில்லியன் டாலர்களுடன் (170 ஆயிரம் கோடி ரூபா(உலக      அளவில் 115வது இடம்) உள்ளனர்.

                                        அம்பானி வீடு

இதை தவிர குமார் பிர்லா (11.8 பில்லியன் டாலர்கள்) உதய் கோடக் (10.7 பில்லியன் டாலர்கள்), ராதாகிஷண் தமனி (10 பில்லியன் டாலர்கள்), கவுதம் அதானி (9.7 பில்லியன் டாலர்கள்), சைரஸ் பூனாவாலா (9.0 பில்லியன் டாலர்கள்) ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.