ஜெருசலம் : ஜெருசலெமில் புதிய தூதரகத்தின் துவக்க விழாவில் டிரம்ப் பங்கேற்க வாய்ப்பு…

ஜெருசலெமிலுள்ள அமெரிக்காவின் புதிய தூதரகத்தின் துவக்க விழாவில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் 5ஆம் நாள் தெரிவித்தார்.

அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் தலைமை அமைச்சர் நெதன்யாஹுவுடன் இணைந்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது இது தொடர்பான கேள்விக்கு டிரம்ப் பதிலளிக்கையில், பதிய தூதரகத்தின் துவக்க விழாவுக்கான ஏற்பாட்டை அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது என்றும், இஸ்ரேலுக்கு மீண்டும் செல்வதை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அமெரிக்க-இஸ்ரேல் உறவு வரலாற்றில் தலைசிறந்த நிலையில் உள்ளது. வர்த்தகம், இராணுவம் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பு நெருக்கமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.