மும்பை பாலிவுட் : 102 வயது முதியவராக நடிக்கிறார் அமிதாப்பச்சன்

மும்பை பாலிவுட் படவுலகில் அமிதாப்பச்சனுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. 75 வயதாகும் அமிதாப்பச்சன்
இந்த வயதிலும் வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே பா படத்தில் குள்ள மனிதராக வந்தார். தற்போது 102 நொட் அவுட் என்ற படத்தில் 102 வயது முதியவராக நடிக்கிறார். ரிஷி கபூரும் இந்த படத்தில் நடிக்கிறார். இருவரும் 27 வருடங்களுக்கு பிறகு சேர்ந்து நடிக்கிறார்கள்.

தந்தைக்கும், மகனுக்கும் உள்ள பாச போராட்டத்தை மையமாக வைத்து நகைச்சுவை கதையம்சத்தில் இந்த படம் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மே மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இதில் அமிதாப்பச்சன் தனது தோற்றத்தை மாற்றி நடிக்கும் படங்கள் இணையதளங்களில் பரவி வருகிறது.

நரைத்த தலை முடி மற்றும் தாடியுடன் அடையாளம் தெரியாத அளவுக்கு அவர் மாறி இருப்பதாக ரசிகர்கள் வியந்து பேசி வருகிறார்கள்.