கல்முனையில் உருவான பதட்ட நிலைமை; துரிதமாக செயற்பட்ட  தமிழ் இளைஞர் சேனையும், தமிழ் இளைஞர்கள் ஒன்றியமும்!

-கேதீஸ்-

கண்டியில் ஏற்பட்டுள்ள கலவரம் அதனை தொடர்ந்து உருவாகியுள்ள அசாதாரண நிலைமை நாட்டில் பல பாகங்களிலும் பரவியுள்ளது. நேற்றைய தினம் (6) கண்டி கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்முனைகுடி, மருதமுனை, நற்பிட்டிமுனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை சாயந்தமருது பகுதிகளில் முஸ்லிங்களால் ஹர்தால், கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இயல்புநிலைகள் சற்று  பாதிக்கப்பட்டிருந்தாலும் கல்முனை பிரதேசத்தில் மு.ப இயல்பு நிலை சாதாரணமாகவே இருந்தது கல்முனையில் முக்கிய பாடசாலைகள் வழமையாக ஆரம்பித்தது மாணவர்களும் கல்முனை பிரதேசத்திலிருந்தும் தூர இடங்களில் இருந்தும் பாடசாலைக்கு சென்றிருந்தார்கள். அலுவலகங்களுக்கும் ஊழியர்களும். பொது மக்களும் தூர இடங்களில் இருந்து வருவோர் வழமை போன்று வந்திருந்தார்கள்.

ஆனால் மு.ப சுமார் 9.30 மணிக்கு பின்னர் கல்முனை பிரதேசத்தில் நிலைமை மிகவும் பதட்டமானதாக மாறிக்கொண்டிருந்தன. மருதமுனை, நற்பிட்டிமுனை, கல்முனைகுடி, சாய்தமருது ஆகிய இடங்களில் வீதிகளில் ரயர்கள் போட்டு எரிக்கப்பட்டன, அத்துடன் வீதிகளில் கற்கள் போட்டு தடைகளும் ஏற்படுத்தப்பட்டன. போக்குவரத்துக்கள் தடைப்பட்டன பயணித்த வாகனங்களுக்கு இந்த இடங்களில் கல்வீச்சுக்களும் நடந்துள்ளன. நிலைமை மோசமாகிக்கொண்டிருந்தன, கலகம் அடக்கும் பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்னர். புதட்டமான நிலைமை அதிகரித்தது.

வீதி தடைகளை ஏற்படுத்தியவர்களுக்கும், பொலிஸாருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டன பாடசாலையும் நேரத்துடன் கலைக்கக் கூடிய நிலைமைகளும் உருவாகின .

கல்முனை நகருக்கு அலுவலகத்திற்கும்,  தேவைகளுக்கும், பாடசாலைகளுக்கும், காரைதீவு, கல்லாறு, களுவாஞ்சிக்குடி, மண்டூர், நாவிதன்வெளி ,சொறிக்கல்முனை, வீரமுனை என தூர இடங்களில் இருந்து வந்த தமிழர்கள் செய்வதறியாது தடுமாறினர்.பாடசாலை மாணவர்களும் பாடசாலை கலைந்தால் வீட்டுக்கு எப்படிச் செல்வது என்று புரியாது அச்சத்துடன் இருந்தனர்.

துரிதமாக களத்தில் இறங்கிய கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை, கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியம்   இளைஞர்கள், செல்லக்கூடிய பார ஊர்திகள், முற்சக்கர வண்டிகள், கார்கள், வேன்கள் ஒழுங்கு செய்து இளைஞர்கள் மோட்டார் சைக்கில்களில் பாதுகாப்புக்காக சென்று மாணவர்களையும் அலுவலகர்களையும் மதகுருமார்களையும் பொது மக்களையும் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பாதுகாப்பாக அழைத்துச்சென்று வெளியேற்றினார்கள்.

இளைஞர்களின் துரித செயற்பாட்டால் தூர இடங்களுக்குச் செல்ல வேண்டியவர்கள் அவர்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக தாமதமின்றி சென்றடைந்தார்கள்.

பெரியநீலாவணையில் தரித்து நின்ற பேருந்துகளில் களுவாஞ்சிக்குடி கல்லாறு மட்டக்களப்புக்கு செல்ல வேண்டியவர்களை ஏற்றிவிட்டார்கள்.

மருதமுனை, நற்பிட்டிமுனை பகுதிகளில் வீதி தடை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மேற்கொண்ட கல்வீச்சில் சில பேருந்துகள் சேதமடைந்திந்தன அத்துடன் சில தமிழ் இளைஞர்களும் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மண்டூர் நோக்கி சென்ற பேருந்து ஒன்று நற்பிட்டிமுனை பகுதியில் வீதி தடை ஏற்படுத்தியவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதால் பேருந்தில் இருந்த தமிழர்களை மீட்டு அனுப்ப சென்ற இளைஞர்களுக்கும் வீதி தடை ஏற்படுத்தியவர்களுக்குமிடையில் முறுகலும் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை அக்கரைப்பற்றுக்கு சென்றிருந்த பாண்டிருப்பு இளைஞர் ஒருவர் அக்கரைப்பற்றில் வீதி தடை ஏற்படுத்திய முஸ்லிங்கள் சிலரால் தாக்கப்பட்டிருந்தார் இங்கும் ஒரு முறுகல் நிலைமை ஏற்பட்டு சுமுகமடைந்தன.

கல்முனை பிரதேச தமிழ் இளைஞர்கள் ஒன்றிணைந்து பொறுமைகளுடன் துரிதமாகவும் செயற்பட்டமை பலராலும் பாராட்டப்பட்டன.

By admin