கண்டி திகன பிரதேசங்களில் முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளை எதிர்த்தும், கன்டித்தும் அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில் கல்முனை சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் முஸ்லிங்கள் வாழும் பல பிரதேசங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு வீதிகளில் டயர் போட்டு தடையேற்படுத்தி வருவதனையும் அவதானிக்க முடிவதுடன் மக்கள் மத்தியில் அச்சநிலை மேலோங்கி இருப்பதனையும் அவதானிக்க முடிகின்றதபோன்ற பல முஸ்லிம் பிரதேசங்களில் பூரண ஹர்த்தாலுடன்இ கடையடைப்பும் இடம்பெற்று வருகின்றது.

இதனால் குறித்த பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள், வங்கிகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், கடைகள் போன்றன மூடப்பட்டும், வைத்தியசாலைகள், அரச நிறுவனங்கள் இஸ்தம்பிதம் அடைந்தும் காணப்படுகின்றன.

இதேவேளை, மருதமுனை பிரதேசத்தில் இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் கண்ணாடிகள் உடைந்த நிலையில் குறித்த பஸ்கள், கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து, கல்முனையில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அக்கறைப்பற்றுக்கான பஸ் போக்குவரத்துகள் இடம்பெறவில்லை.

மேலும், மருதமுனையில் கல்முனை- மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் டயர்கள் எரிக்கப்பட்டும் மரக்குற்றிகள் மற்றும் கொங்க்ரீட் தூண்கள் போடப்பட்டும் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டிருந்ததுடன், அங்கு இளைஞர்கள் ஒன்றுதிரண்டு கண்டனப் பேரணி ஒன்றையும் நடத்தினர்.

(டினேஸ், சௌவியதாசன்)

 

 

By admin