நற்பிட்டிமுனை இளைஞர் அமைப்பின் சிரமதானப் பணி!

நற்பிட்டிமுனை இளைஞர் அமைப்பினர் நேற்று (5) நற்பிட்டிமுனை பொது மயானத்தில் சிரமதானப்பணியை ஆரம்பித்தனர்.

மயானத்தில் புற்கள், புதர்கள் அதிகமாக வளர்ந்துள்ளதால் இவற்றை அழித்து முழுமையான சிரமதானத்தை செய்து சுத்தப்படுத்தும் வகையில் நேற்றையதினம் புற்களுக்கு களைநாசினி விசிறப்பட்டது.

சில தினங்களில் முழுமையாக சிரமதானம் மேற்கொள்ளப்படும் என இவ் அமைப்பினர் தெரிவித்தனர்.

By admin