கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியம் த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்!

கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியம் நேற்று முன்தினம் (4) கல்முனை மாநகரசபைக்கு தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், மற்றும் காரைதீவு பிரதேச சபைக்கு தெரிவான ஜெயசிறில் ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் அட்டப்பள்ளம் விடயத்தில் எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட்டு பல்வேறு வழிகளிலும் முயற்சி செய்து கைது செய்யப்பட்வர்களை விடுதலை செய்வதற்கு எம்மால் முடிந்தளவு பங்களிப்புக்களையும் எவ்வாறு செய்யலாம் என்பது தொடர்பாக கலந்துரையாடியதுடன், விடுதலை செய்யப்பட்ட பின்னரும் அட்டப்பள்ளம் இந்து மயான பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை பெற்றுக்ககொடுக்கும்வரை தொடர்ந்து எல்லா உறுப்பினர்களும் கலந்துரையாடி ஒற்றுமையக செயற்பட்டு அட்ப்பள்ளம் மக்களுக்கு உதவும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

 

By admin