கல்முனை துளிர் கழகத்தால் எதிர்வரும் 10 ஆம் திகதி இரத்ததான முகாம்!

கல்முனை பிரதேசத்தில் நீண்ட காலமாக பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் கல்முனை துளிர் கழகம் எதிர்வரும் 10 ஆம் திகதி இரத்த தான முகாம் ஒன்றை நடாத்தவுள்ளனர்.

கல்முனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலையில் 10 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை இடம்பெறும்.  இரத்த தானம் வழங்கக்கூடியவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்குமாறு துளிர் கழகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

இரத்த தானம் செய்ய விரும்புவோர் மேலதிக தகவல்கள் வேண்டுமாயின் இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெயர்களையும் பதிவு செய்து கொள்ளலாம்

கிரிஷாந் 0772483285

By admin