விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  அட்டப்பள்ள கிராம 21 நபர்களும் பிணையில் விடுதலை!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அட்டப்பள்ள கிராமத்தைச் சேர்ந்த 21 நபர்களும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான  ரமணா, சந்திரமணி, சிவரஞ்சித், ஆர்த்திகா, ஜெகநாதன் ஆகியோர் நீதிமன்றில் பிரசன்னமாகி  முன்நகர்வு மனுவை சமர்ப்பித்து  இவர்களை பிணையில் விடுவித்துள்ளார்கள்.

இந்த சட்டத்தரணிகளுக்கும் இதற்காக உழைத்த அனைவருக்கும் அட்டப்பள்ளம் மக்கள்நன்றியினையும் தெரிவித்தனர்.

அட்டப்பள்ளம் பொது மயானத்தை முஸ்லிம் பேராசிரியர் ஒருவர் அபகரிக்கும் முயற்சியையடுத்து அட்டப்பள்ளம் கிராம மக்கள் இதற்கு எதிராக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் இந்சம்பவங்களையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட அட்டப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 23 பேர் 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த மக்கள் சார்பாக சட்டத்தரணிகளான சிவரஞ்சித் மற்றும் ஆர்த்திகா ஆகியோர் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். இதில் இரண்டு பெண்கள் மட்டும் அன்றைய தினம் விடுதலை செய்யப்பட்னர் ஏனைய 21 நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

By admin