பாடசாலையை சுற்றியுள்ள பகுதியில் சிகரெட் விற்க தடை.  உலக சுகாதார தினமான ஏப்ரல் 7ம் திகதி பிரகடனப்படுத்தப்படும் சுகாதார – அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன..

பாடசாலைவளவில் 100 மீற்றர் தூரத்திற்குள் சிகரெட் விற்பனை செய்யப்படுவதனை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு உலக சுகாதார தினமான ஏப்ரல் 7ம் திகதி பிரகடனப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.   இதற்கு மேலதிகமாக 18 வயதிற்கு உட்பட்டோருக்கு மாத்திரம் சிகரெட்டை விற்பனை செய்வதை தடை செய்வதற்கான உத்தரவு 21 வயதாக அதிகரிப்பதற்கும் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.இது அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.