அவுஸ்திரேலியா : ஆஸ்திரேலியாவில் வங்கிக் கணக்கு வைத்திருந்த மலேசியப் போலீஸ் அதிகாரியின் வங்கிக் கணக்கை முடக்கியது அவுஸ்திரேலியா..

மலேசியக் காவல் துறை அதிகாரியும், புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் வான் அகமட் நஜ்முடின் முகமட் சிட்னியில் காமன்வெல்த் வங்கியில் வைத்திருக்கும் வங்கிக் கணக்கு ஆஸ்திரேலிய அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கிக் கணக்கில் 320,000 ஆஸ்திரேலிய டாலர் இருந்ததாகவும், அதன் இலங்கை மதிப்பு மதிப்பு சுமார் இலங்கை மதிப்பின்படி சுமார் 3,840, 000 இருக்கலாம் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்தத் தகவலை சிட்னி மோர்னிங் ஹெரால்ட் ( MORNING HERALD) என்ற பத்திரிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்தப் பணம் ஒரு குற்றத்தினால் பெறப்பட்ட பணம் அல்லது முறைகேடாக பணமாற்றம் செய்யப்பட்ட (laundered money) செய்யப்பட்டது என்று ஆஸ்திரேலியாவின் மத்தியப் போலீஸ் துறை சந்தேகப்பட்டதாகவும் அந்தப் பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது.