பயணிகளை ஏற்றாமல் செல்லும் பேருந்துகள் – பேருந்து ஓட்டுனர்களின் கவனத்திற்கு!
-அரவி-
தற்போது நாட்டில் காணப்படும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அதிகளவாக பொதுப்போக்குவரத்துக்களையே பொதுமக்களும் மாணவர்களும் அன்றாடத் தேவைக்கு செல்வோரும் பயன்படுத்த காத்திருக்கின்றனர்.

ஆகவே முன்னர் போன்று வீதிகளில் போட்டிக்கு ஓடாமல் உங்கள் வேகங்களை கட்டுப்படுத்தி விபத்துக்களையும் தடுப்பதோடு வீதிகளில் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவர்களையும் மக்களையும் ஏற்றிச் செல்லுங்கள்.

சன நெரிசல் உள்ள இடங்களில் அதிக வேகத்தில் பேருந்தை செலுத்தும் ஓட்டுநர்களுக்கு, வீதியில் காத்து நிற்கும் மாணவர்களை மக்களை ஏற்றாமல் செல்லும் பேருந்துகளுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோருகின்றனர்