பாகிஸ்தான் : இந்து தலித் பெண் கிருஷ்ண குமாரி கோல்ஹி நாடாளுமன்ற எம்.பி.யாக பாகிஸ்தானில் முதன்முறையாக தேர்வு……

பாகிஸ்தானில் முதன் முறையாக தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்துப் பெண்மணி ஒருவர் செனட்டராக பதவியேற்றிருக்கிறார்.

பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தைச் சேர்ந்த 39 வயதான கிருஷ்ண குமாரி கோல்ஹி, பிலாவால் பூட்டோ சர்தானி தலைமையேற்றிருக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் உறுப்பினராவார்.

கிருஷ்ணகுமாரியின் குடும்பம் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த குடும்பமாகும். கடந்த 1857-ம் ஆண்டு சிந்து மாநிலத்தில் நாகர்பாரிக்கர் பகுதியில் கிருஷ்ணகுமாரியின் தாத்தா ரூப்லோ கோல்ஹி ஆங்கிலேயர்களுக்காகு எதிராக கடுமையாக போராட்டம் நடத்தியவர். அதன் 1858-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் செனட் அவையில் 52 உறுப்பினர்களுக்கான இடம் காலியாக உள்ளதால், அதற்கான தேர்வு நடந்தது. இதில் பஞ்சாப், சிந்து மாநிலத்தில் 12 பேர், கைபர்,பக்துன்கவா, பலுசிஸ்தான் மாநிலத்தில் 11 பேர், பழங்குடிப் பகுதியில் 4 பேர், தலைநகரில் 4பேர் என மொத்தம் 52 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்த வகையில், சிந்து மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகுமாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிந்து மாநிலத்தில் பெண்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட தொகுதியில் நின்று கிருஷ்ணகுமாரி வென்றிருக்கிறார். பாகிஸ்தானில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்து பெண்மணி ஒருவர் முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாகிஸ்தானில் மாறிவரும் சமூகப் பார்வையையும், பெண்களுக்கான உரிமைகள் வழங்குவது அதிகரித்து வருவதையும் காட்டுவதாகப் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னர் 2006 முதல் 2012 வரை ரத்னா பகவன்தாஸ் சாவ்லா என்ற இந்துப் பெண்மணி பாகிஸ்தானின் செனட்டராகப் பதவி வகித்திருக்கிறார்.

200 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட பாகிஸ்தானில் 2 விழுக்காட்டினர்