ரணில் – சர்வதேச நாணய நிதியம் பேச்சு

இலங்கைக்கு வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் 10 பேர் கொண்டு குழு, கொழும்பில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

பிரதமரும், நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவுடன் இந்த பேச்சுவார்த்தை சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

அமெரிக்காவில் நடந்த சந்திப்பு

ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தின் குழு, அமெரிக்காவுக்கு சென்று சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தது. இதற்கு இந்தியாவும் உதவியிருந்தது.

இதனையடுத்து நாணய சபையின் கோரிக்கையின்படி, இரண்டு ஆலோசனைக்குழுக்களையும் இலங்கை அரசாங்கம் அமைத்துள்ளது.இந்தநிலையிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கை வந்துள்ளனர்.