(சுதா)

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் தொன்மை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக திகழ்ந்துவரும் திரு இருதயநாதர் ஆலய வருடாந்தப் பெருவிழா கடந்த 17.06.2022 திகதி வெள்ளிக்கிழமை ஆலய பங்குத்தந்தை அருட்பணி அலெக்ஸ் றொபர்ட் அடிகளார் தலைமையில் பங்குமக்கள் சூழ கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

பெருவிழா காலத்தின் முதலாவது நவநாள் திருப்பலியினை “திரு அவை கடவுளின், புதிய தேர்நதெடுக்கப்பட்ட மக்கள்” எனும் தலைப்பில் அருட்பணி ஏ.நவரெட்ணம் அடிகளார் ஒப்புக்கொடுத்ததுடன் புனித சூசையப்பர் வட்டார இறைமக்கள் திருப்பலியை சிறப்பிப்பதனையும், முதலாவது நவநாள் திருப்பலியில் அதிகளவிலான பங்கு மக்கள் உட்பட இறைவிசுவாசிகளையும் கலந்துகொண்டு முதல்நாள் திருவிழா நிகழ்வை சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.