(கனகராசா சரவணன்)

தமிழ்த் தேசியக் கட்சியினரால் யாழ் தீவகத்தில் வேலணை பிரதேச செயலகப் பிரதேசத்தில ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையேந்தவேண்டும் வெளிநாட்டில்’ என்ற தலைப்பிலான தற்சார்புப் பொருளாதரம் பற்றிய விழிப்புணர்வு பற்றிய துண்டுபிரசுரம் பிரச்சாரம் இன்று சனிக்கிழமை (18) கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா ஆரம்பித்துவைத்தார்.

இந்த துண்டுபிரசுர விழிப்புணர்வு பிரச்சாரம் முதற்கட்டமாக வேலனை பிரதேச செயலகப் பிரதேசங்களில் தமிழ்த் தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுவீகரன் நிஷாந்தனால் இப்பகுதியில் வீடுவீடாக சென்று துண்டுபிசுரங்களை வழங்கி மக்களுடன் கலந்துரையாடி இந்த விழிப்புணர்வினை முன்னெடுத்துவருகின்றார்.