கல்முனை ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகம் நாளை ஆரம்பம்!

கல்முனை ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய புனராவர்த்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நாளை திங்கட்கிழமை 20ஆம் திகதி கிரியைகளுடன் ஆரம்பமாகிறது.

நாளை மறுதினம் 21 செவ்வாய், 22 புதன் ஆகிய இரு தினங்களும் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று, 23ஆம் திகதி வியாழக்கிழமை திருக்குட திருமுழுக்கு கிரியைகள் இடம்பெறும்.

கும்பாபிஷேக கிரியைகள் சிவ பிரம்மஸ்ரீ சுந்தர செந்தில் ராஜா சிவாச்சாரியார் தலைமையில் இவ்வாலயத்தின் முன்னாள் பிரதம குரு சிவஸ்ரீ பரமசாமி குருக்கள் அவர்களின் ஆசீர்வாதத்துடன் கும்பாபிஷேக நிகழ்வுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிரியை உதவிக்குருமார்

சிவஸ்ரீ நித்திய சிவானந்த குருக்கள்

சிவஸ்ரீ சதாசிவ ரவீந்திரராஜ குருக்கள் (ஆலய பிரதம குரு )

சிவஸ்ரீ யோகீஸ்வரர் ஞானேஸ்வரர் குருக்கள்

சிவஸ்ரீ கருணாகர மகேஸ்வரக்குருக்கள்

சிவஸ்ரீ சரவண சந்திரகுமார குருக்கள்