கொழும்பிலும் ஏனைய மாகாணங்களில் நகர்ப்புற பாடசாலைகள் நாளை முதல் ஒருவாரம் மூடப்படுகிறது!

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பிலும் ஏனைய மாகாணங்களில் உள்ள நகர்ப்புற பாடசாலைகள் நாளை திங்கட்கிழமை முதல் ஒருவாரம் மூடப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மூடப்படும் இடங்களில் இணைய வழியில் கல்வி கற்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இணையவழி மூலம் கல்வி நடவடிக்கைகள் இடம் வரும் நேரங்களில் மின்சார மின் துண்டிப்பு இடம்பெறாமல் இருப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.