எரிபொருள் நெருக்கடியை முன்னிட்டு ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமம் காரணமாக கொழும்பில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போக்குவரத்துச் சிக்கல்கள் அற்ற, நாட்டிலுள்ள அனைத்து கிராமியப் பாடசாலைகளையும் அதிபர்களின் விருப்பத்திற்கேற்ப பராமரிக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

புறநகர்ப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளிலும் இந்த வாரத்தில் இணையவழி முறை கற்பிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இணையவழி கல்வி நடைபெறும் பகலில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என்று பொது பயன்பாட்டு ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் கல்வி அதிகாரிகளின் கூட்டத்தில் அடுத்த வாரக் கல்வி குறித்து தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.