மட்டக்களப்பில் அறிமுகப்படுத்தப்படும்  அட்டை மூலம் மாத்திரமே எரிவாயு, எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும்– மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன்-

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு  பிரதேச ரீதியாக எதிர்வரும் புதன்கிழமை முதல் குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் அட்டை ஊடாக மட்டுமே குறித்த பொருட்களை கொள்வனவு செய்யமுடியம் என  மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன்  தெரிவித்தார் 

மாவட் அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (17)   எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் அத்தியவசிய திணைக்கள பணிப்பாளர்கள்  இராணுவத்தினர், பொலிசார் பிரதேச செயலாளர்கள்  அழைத்து இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 ஆயிரத்து 720 ஏக்கர்  நிலப்பரப்பில் சிறுபோக வேளாண்மை பயிரப்பட்டுள்ளது இந்த வேளாண்மை அறுவடை  எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 திகதி முடிவடைய இருக்கின்றது.  

இந்த செய்கை பண்ணப்பட்டுள்ள வேளாண்மை அறுவடை செய்ய ஒரு இலச்சத்து 20 ஆயிரத்து 752 லீற்றர் டீசல் தேலைப்படுகின்றது அதேவேளை எமக்கு வாராந்தம் மீன்பிடியாளர்களின் தேவையை நிவர்த்தி செய்வதற்காக ஒரு கிழதைக்கு ஒரு இலச்சத்து 50 ஆயிரத்து 22 லீற்றர் மண்ணெண்ணைய்யும் 6 இலச்சத்து 61 ஆயிரம் டீசலும் தேவைப்படுகின்றது .

ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கிடைக்கின்ற மண்ணெண்ணையும் டீசலும் பாரியளவு குறைந்தளவுதான் கிடைக்கின்றது. எனவே இந்த இக்கட்டான சூழலிலே அத்தியாவசிய சேவையில் கடமையாற்றுகின்ற சுகாதார துறையினர் நீர்வழங்கல் துறையினர், கல்வி துறையினர் போன்ற பல்வேறு துறையினர் எரிபொருளை பெறுவதில் பாரிய அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர்.

எனவே இந்த நெருக்கடியை தீர்ப்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் அத்தியவசிய திணைக்கள பணிப்பாளர்கள்  இராணுவத்தினர், பொலிசார் பிரதேச செயலாளர்கள்  அழைத்து கலந்துரையாடி   ஒரு குடும்பத்துக்காக அத்தியவசிய பொருட்களை வழங்கும் போது குடும்ப அட்டை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம் 

இந்த அட்டையை ஒவ்வொரு குடும்பமும் வைத்திருப்பதன் மூலம் இந்த அட்டையை காட்டி அவர்களது அவசிய தேவைக்கான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் அதாவது எரிபொருளாக இருந்தாலும் சரி எரிவாயுவாக இருந்தாலும் சரி  எனவே இந்த அட்டையை விநியோகிக்கும்பணி தற்போது ஆரம்பித்துள்ளதுடன்  எதிர்வரும் புதன்கிழமை (22)  இந்த அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு அன்றைய தினத்தில் இருந்து இந்த அட்டையின் மூலமாக இந்த அவசியமான பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கின்றோம் 

கிராம உத்தியோகத்தர் மூலம் இந்த அட்டை விநியோகிக்கப்படுகின்றது ஒரு குடும்பத்துக்கு ஒரு அட்டை இந்த அட்டை ஒவ்வொரு பிரதேசத்துக்கும் வேறு வேறு நிறத்தில் வழங்கப்படும் எனவே அந்தந்த பிரதேசத்தில் இருக்கின்ற மக்கள் அந்தந்த பிரதேச எல்லைக்குள் இருக்கின்ற விநியோகத்திரிடம் மாத்திரம் பெற்றுக் கொள்ளலாம் அதேவேளை வேறு பிரதேசத்தில் பொருளை பெற்றுக் கொள்ளமுயாது.  

அதேவேளை பெற்றோல் நிலைய உரிமையாளர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு சில சம்பவங்கள் ஒரு குடும்பத்தைச் சோந்த இரண்டு பேர் மூன்று பேர் வரிசையிலே காத்திருப்பதாகவும் ஒரு குடும்பத்துக்கு தேவையான அளவைவிட அதிகமாக எரிபொருளை பெற்று விற்பனை செய்வதாகவும் இதன் மூலம் மற்றவர்கள் பெற்றுக் கொள்வதை தடுப்பதாக ஒரு சிலர் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

எனவே மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு அன்பாக கேட்டுக் கொள்வது இந்த இக்கட்டான சூழலில் மிகவும் பெறுப்புணர்வுடன் செயற்பட்டு அவ்வாறான செயல்களில் ஈடுபடவேண்டாம் எனவும் எல்லா மக்களும் மட்டக்களப்பு மக்கள் எல்லா மக்களுக்கும் அரிய அளவில் கிடைக்கின்ற வளத்தை ஓரளவுக்கு கிடைக்க கூடியமாதிரி பங்கிடுவதற்கு உங்களது ஒத்துழைப்பு அவசியம் என்றார்.