நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் ஒரு பகுதி இன்று நள்ளிரவு 12 மணி முதல் மூடப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.நிலையத்தை 75 நாட்களுக்கு மூட வேண்டும் என்று சங்கத்தின் இணைச் செயலாளர் எரங்க குடஹேவா தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் மின்வெட்டு நீடிக்கலாம் எனவும் இலங்கை மின் பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மின் உற்பத்தி நிலையங்களுக்கான உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை மின்சார சபையிடம் நிதி இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கும் லக்விஜய நிலக்கரி மின் நிலையத்திற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் சுமார் 640 மில்லியன் டொலர்கள் தேவைப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணம் தேடுவதற்கு வழி தெரியாததால், முழுமையாக டீசல் மின் உற்பத்தி நிலையங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இல்லையெனில் மின்வெட்டு நேரம் இன்னும் அதிகமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.