எதிர்வரும் 24ம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் வரை நாட்டில்  எரிபொருள் விநியோகம் சீரமைக்கப்படாது என ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு எரிபொருளின் விலையும் 60 ரூபாவிற்கும் அதிகமாக உயர்த்துவதற்கு வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.