இந்திய கடனில் 50 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்ய தீர்மானம் !
இந்தியாவில் இருந்து பெறப்படும் கடனிலிருந்து 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் அரிசித் தட்டுப்பாடு மற்றும் அரிசிக்கான அதிக விலை உயர்வு என்பவற்றை கட்டுப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.