இலங்கை அணிக்கு எதிரான முதல், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி டக்வேத்-லூயிஸ் முறையில் 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் மெக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களையும் , ஸ்மித் 53 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் ஹசரங்க 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

முன்னதாக துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ஓட்டங்களை பெற்றது.

இதில் குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களையும் நிசங்க 56 ஓட்டங்களையும், குணதிலக்க 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

டக்வேத்-லூயிஸ் முறையில் ஓவர்கள் குறைப்பு

இந்த போட்டி கண்டி, பல்லேகல்ல மைதானத்தில் இடம்பெற்றது. மழை காரணமாக போட்டியின் இரண்டாம் துடுப்பாட்டம், டக்வேத்-லூயிஸ் முறையில் ஓவர்கள் 44ஆக குறைக்கப்பட்டு ஓட்ட இலக்கு 282 ஆக தீர்மானிக்கப்பட்டது. இதன்படி அவுஸ்திரேலிய அணி 42.3 ஓவர்களில், 9 விக்கெட் இழப்புக்கு 282 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளை கொண்ட, ஒருநாள் தொடரில், அவுஸ்திரேலிய அணி,1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது.