இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மக்கள் நாளாந்தம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நாட்டில் தற்போது வருமானத்திற்கும் அதிகமாக அத்தியாவசியப பொருட்களின் விலை அதிகரிப்பினால் மக்கள் நாளாந்தம் மூன்று வேளை உணவினை கூட உண்ண முடியாத சூழ்நிலையில் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்த வகையில், மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு சரியான தீர்வினை வழங்க கூடிய வகையில் இலங்கை அரசாங்கத்திடம் எந்தவொரு சரியான திட்டங்களும் இல்லை என்றும், மக்கள் உணவின்றி பசியால் உயிரிழக்கும் நிலையேற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவை உள்ளிட்ட இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பிலான விரிவான தகவல்களுடன் அரசியல் ஆய்வாளர் நிக்சன். ஐ.பி.சி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளக்கமளித்துள்ளார்.