உலக குருதிக் கொடை தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையி ல் இடம்பெற்ற நிகழ்வு!

உலக குருதிக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் 14.06.2022 இன்று இரத்ததான நிகழ்வும், கௌரவிப்பும் இடம்பெற்றது.

வைத்திய அத்தியட்சகர் இரா முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிகளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணையகத்தின் செயலாளர் எம்.கோபாலரெட்ணம், EHED நிறுவனத்தின் பணிப்பாளர் அருட் தந்தை A. ஜேசுதாசன், , சொர்ணம் நகை மாளிகை நிறுவனத்தின் உரிமையாளர் எம்.விஸ்வநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது அதிதிகள் வைத்தியசாலை நிர்வாகத்தால் கௌரவிக்கப்பட்டதுடன் குருதிக் கொடையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராகவுள்ள எம் கோபாலரெட்ணம, சொர்ணம் நகை மாளிகையின் அதிபர் எம்.விஸ்வநாதன், EHED நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்தந்தை A. ஜேசுதாசன் ஆகியோரது சேவையைப் பாராட்டி வைத்தியசாலை நிர்வாகத்தால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் இந்நிகழ்வில் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் என்.ரமேஸ்,வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், வைத்தியசாலையின் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்