மின்னுற்பத்தி நீர்த்தேக்கப் பகுதிகளில், விஞ்ஞான ரீதியிலான செயற்கை மழையை பெற்றுக் கொள்வதன் மூலம் நாட்டிற்கு பொருளாதார நன்மைகளை அடைய முடியுமென்று மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தாய்லாந்து விஞ்ஞானிகள் சிலர் மேற்கொண்ட ஆய்வின் மூலம், செயற்கை மழையை பெற்றுக்கொள்ள முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படுமென்று அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

இதற்காக இலங்கையின் விசேட பிரதிநிதிகள் தாய்லாந்து அனுப்பப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கான முழு செலவையும் மின்சார சபை ஏற்றுக்கொள்ளும்.
இதன் மூலம், செயற்கை மழை ஏற்படுத்தப்படுவதல்ல, மின்னுற்பத்தி நீர்த்தேக்கப் பகுதிகளில் மழையைப் பெற்றுக்கொள்ளவது மாத்திரமே ஆகும். இதனால், சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் தாய்லாந்து விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

By admin