‘மகுடம் கலை இலக்கிய வட்டம்’ நடத்தும் மண்டூர் அசோகாவின் ‘எழதப்படாத கவிதைகள்’ சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செலாளர் வெ.தவராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை ஓய்வுநிலை பேராசிரியர் செ.யோகராசா மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி றூவி வலன்ரீனா பிரான்சிஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

நூலுக்கான வெளியீட்டுரையை மகுடம் வி.மைக்கல் கொலினும் மதிப்பீட்டுரையை எழுத்தாளர் உமா வரதராஜனும் ஏற்புரையை நூலாசிரியை மண்டூர் அசோகாவும் நிகழ்த்தவுள்ளனர்.

நூலின் முதல் பிரதியினை மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புலவர் வி.ரஞ்சிதமூர்த்தி பெற்றுக் கொள்வார்.