கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினரால்கண் சத்திர சிகிச்சைக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன

அனேகமான கண் சத்திரசிகிச்சைகளுக்கு மருந்துகள் அரிதாக காணப்படும் இவ் வேளையில் நோயாளர்களின் நன்மை கருதி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு அவசியமான ” Lignocaine Injection (Xylocaine)” இல்லாமையினால் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்வது சிரமமாக காணப்பட்டதுடன் கண் சத்திரசிகிச்சை செய்யும் நோயாளிகளும் பல சிரமங்களை எதிர்நோக்கினர்.

இதனை கருத்தில் கொண்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி. இரா. முரளீஸ்வரனின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினரும் இலங்கை வங்கியின் ஓய்வுநிலை முகாமையாளருமான K. மகாலிங்கம் அவர்களால் கண் சத்திரசிகிச்சைக்கு தேவையான Lignocaine Injection (Xylocaine)” வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மற்றும் கண் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர். N. நிரோஷன் அவர்களிடம் 2022.06.08 ஆம் திகதி அன்று நன்கொடையாக கையளிக்கபட்டது.

மேலும் இவர் மூலம் வைத்தியசாலையின் மருத்துவர்களின் உபயோகத்திற்காக 4 ஸ்டேதஸ்கோப்களும் நன்கொடையாக வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.