(-க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு  மாவட்டத்தின் கடந்த 24மணித்தியாளங்களுக்குள் இடம்பெற்ற வாகன விபத்தில் 6பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான் கிராமத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் விஜயகுமார்-வினுசன்(வயது-15) என்பவர் பலமாக அடிபட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு நெற்றியில் பலமாக அடிபட்டுள்ளது.இவரை கண்டி போதனா வைத்தியசாலைக்கு மட்டக்களப்பிலிருந்து இடமாற்றப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் கர்ப்பிணித்தாய் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்தநிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு -திருகோணமலை வீதியில் தாண்டவன்வெளி தேவாலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கல்லடி வேலூர் காளிகோவில் வீதியைச் சேர்ந்த அற்புதராசா அனுசியா(வயது-24) என்பவரே இவ்வாறு கார் விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.இதேவேளை செங்கலடி-பதுளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளார்கள்.

பண்குடாவெளியைச்சேர்ந்த க.கணேஸ்வரன்(வயது-23),எஸ்.சிந்துஷன்(வயது-25),அ.அரசரெத்தினம்(வயது-54) ஆகிய மூவருமே அதிக வேகப்கட்டுபாட்டை இழந்து நேருக்குநேர் மோதியும்,கனரக வாகனத்தில் மோதியும் விபத்துச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.இவ்விபத்துக்கள் இடம்பெறுவதற்கு வேகமாக வாகனத்தை செலுத்துதல்,மதுபோதையில் வாகனத்தை செலுத்துதல்,போக்குவரத்து விதிகளையும்,சட்டத்தையும் மீறி வாகனத்தை ஓட்டுதல்,வாகனத்தை செலுத்துவதற்கு 18வயதை பூர்த்தியடையாத நிலை,வீதிச்சமிஞ்ஞையை தெரியாமல் வாகனத்தை செலுத்துதல் போன்றன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துக்கு குந்தகம் விளைவித்து செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் முறையான,பாதுகாப்பான போக்குவரத்து சட்டத்தை சீராக திட்டமிட்டு போக்குவரத்து சிறப்பாக இடம்பெறவேண்டும் என பாதசாரிகள்,பயணிகள் கோரிக்கை முன்வைக்கின்றார்கள்.

battinews

By admin