சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடனைப் பெறுவதற்கு இலங்கை இந்த வருட இறுதி வரை காத்திருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு செயற்பாடு இலகுவானதல்ல என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெற இந்த ஆண்டு இறுதி வரை காத்திருக்க வேண்டும், அதற்கு முன் நாங்கள் எந்தப் பணத்தையும் பெற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.