யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு கரம் கொடுக்கும் நோக்கில் உதயமாகின்றது
தேசத்தின் வேர்கள் அமைப்பு.

(டினேஸ்)

இவ்வமைப்பின் ஆரம்ப நிர்வாக சபை ஒன்றுகூடல் நேற்று 03 மட்டக்களப்பில் நடைபெற்றது.

இதன் போது அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த அமைப்பின் இயக்குனர் கணேசன் பிரபாகரன் இன்று நாம் தேசத்தின் வேர்கள் அமைப்பின் முதலாவது அமர்வை ஏற்பாடு செய்திருந்தோம் இதன் போது மட்டக்களப்பு அம்பாறை பிரதேசத்திற்கான பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர் அந்தவகையில் நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு கரம் கொடுக்கும் நோக்கிலேயே நாம் இதனை உருவாக்கியுள்ளோம் இதில் பல அனுபவங்கள் வாய்ந்த செயற்பாட்டாளர்கள் எம்முடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ளனர் அந்தவகையில் எதிர்காலத்தில் அமைப்பின் மூலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றவர்கள் முன்னாள் போராளிகள் மாற்றுத்திறனாளிகள் ஆகிய பலர்களுக்காக உதவி செய்யவுள்ளோம் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன் என அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.

 

By admin