கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் திருகோணமலைக்கான கூட்டம் குளக்கோட்டன் மண்டபத்தில் 9.45 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றன. இங்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்கள் சார்பில் சட்டத்தரணி த.சிவநாதன் ஒன்றியத்தின் உருவாக்கம் மற்றும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட கூட்டங்களும் மாவட்ட பிரதிநிதிகள் தெரிவும் பற்றி விளக்கமளித்தார்.

இதனையடுத்து கலந்துகொண்ட மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டன.

பலரும் ஒன்றியத்தின் நிலப்பாட்டைஆதரித்ததுடன் சிலர் ஒன்றியத்தின் பெயரில் உள்ள சொல் தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சட்டத்தரணி சிவநாதன் ஒன்றியம் இன்னும் முழுமை பெறவில்லை. தற்போது மாவட்ட பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 59 பிரதிநிதிகளும் அம்பாறை மாவட்டத்தில் 59 பிரதிநிதிகளும் தெரிவாகியுள்ளனர்.இவர்கள் பிரதேசசெயலக மட்டத்தில் ஐவர் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு ள்ளனர்.

இவ்வாறே இக்கலந்துரையாடலில் இறுதியில் திருகோணமலைக்கான பிரதிநிதிகள் தெரிவு செய்ய வேண்டும்.

அதன் பின்னர் இப்பிரதிநிதிகள் கூடி மக்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக ஆராய்ந்து முற்றிலும் ஜனநாயக முறைப்படி தீர்மானங்கள் எடுக்கப்படும். தற்போது முடிவான எந்த தீர்மானத்திற்கும் வரவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தைப்பொறுத்தவரை வரும் மாகாண சபைத்தேர்தலில் தமிழ் கட்சிகள் இணைந்து ஒருசின்னத்தில்போட்டியிடவேண்டும். அதன்மூலம் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்து முடிந்தளவு மக்களின் அடிப்படை மற்றும் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முயற்சிக்க வேண்டும்.இதுதொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல தமிழ் கட்சிகளுடனும் பேசியுள்ளோம். கருணா தலமையிலான கட்சி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுடனும் பேசியுள்ளோம். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் உடனான சந்திப்பில் உறுதியான முடிவு உடன் கிடைக்கப்பெறவில்லை. அவர்கள் தமது தலமையோடு பேசி தீர்மானத்திற்கு வருவார்கள் என நாம் உணர்தோம்.

இவ்வாறே தமிழரசுக்கட்சி,தமிழர்விடுதலைக்கூட்டணி,ரெலோ, உள்ளிட்ட பல தமிழ்கட்சிகளுடனும் மக்கள் சார்பான எமது நிலப்பாட்டை தெரிவித்துள்ளோம். எமக்கு எவ்விதமான அரசியல் பின்னணியும் இல்லை மாறாக மக்களின் எதிர் காலம் அவர்களது அபிவிருத்தி அரசியல் அபிலாசைகளுக்காக செயற்படுவதே நோக்கமாகும். ஏந்த சந்தர்பத்திலும் கிழக்கு தமிழர் ஒன்றியம் தேர்தலில் நேரடியாக இறங்கப்போவதில்லை. அதேவேளை வடகிழக்கு இணைந்த மக்களின் சுயநிர்ணயக்கோட்பாட்டையும் கைவிடப்போவதில்லை. இது தொடர்பான விரிவான முடிவுகளை தெரிவாகும் அமைப்புக்கூட்டங்களில் பிரதிநிதிகள்மேலும் முவுகளை எடுப்பார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

இங்கு கலந்து கொண்ட பிரதிநிதிகள் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.பலர் பெயர் தொடர்பான தமத ஆட்சேபனையும் முன்வைத்தனர். இதுதொடர்பாக தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. கலந்துரையாடி சாதகமான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். தமிழ் மக்களின் எதிர் காலம் குறித்து கட்சிகளை மட்டும் நம்பி பயனில்லை என்ற கருத்தும் பலரால் முன்வைக்கப்பட்ன

ஆயினும் எந்தக்கட்சியையும் தனிநபரையும் நேரடியாக தாக்கி கருத்துக்கள் வெளியிட அனுமதிக்கப்பட வில்லை. என்பது குறிப்பிடத்தக்கத்து.இறுதியில் திருகோணமலை மாவட்டத்திற்கான பிரதிநிதிகள் சிலர் தெரிவானபோதும் பலர்மேலும் தெரிவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Supeedsam

By admin