பாதிக்கப்பட்ட பெரியநீலாவணை மக்களுக்கான கல்முனை ஆதார வைத்தியசாலையின் அவசர வைத்திய சேவை!

கடந்த புதன்கிழமை (01\03\2018) நீலாவணை சுணாமி குடியிருப்பு மாடி வீட்டு பகுதியில் ஏற்பட்ட, சுழல் காற்று அனர்த்தம் காரணமாக கூரைகள் வீசப்பட்டு , உடமைகளும் சேதமாகியிரந்தன.. இவ்வேளையில் மக்கள் பயந்து உயிர் காக்க பாதுகாப்பு இடங்கள் தேடி ஓடிய வேலையிலும், கூரைகள் விழுந்த காரணத்தினாலும் காயமடைந்தனர். காயமடைந்த மக்கள் பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர்.

இம்மக்களுக்கான கல்முனை ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரா முரளீஸ்வரன் அவர்களின் துரித நடவடிக்கையினால், கல்முனை ஆதாரவைத்தியசாலையின் நடமாடும் சேவைப்பிரிவு இ தலத்திற்கு விரைந்து தேவையான மருத்துவ உதவிகளை வழங்கியிருந்தனர்.

By admin