கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை மஹா விஷ்ணு ஆலயத்தின் உண்டியல் நேற்று இரவு (3/3) உடைத்து களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாலயம் பிரதான வீதியில் அமைந்துள்ளதுடன் இவ்வாலத்திலிருந்து 50 மீற்றர்களுக்கும் குறைவான தூரத்தில் விசேட அதிரடிப்படை முகாம் அமைந்திருக்கின்றது.

நேற்று இரவு காவலாளி கோயிலில் தங்கியிருக்கவில்லையென்றும்,   பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது  என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

அண்மைய காலமாக விதம் விதமான திருட்டு சம்பவங்கள் கல்முனை பிரதேசத்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை பொலிஸார் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வரகின்றனர்.

-அரவி வேதநாயகம்-

-சௌவியதாசன்-

By admin