இந்து மயானத்தை அபகரிக்கும் முஸ்லிம் பேராசிரியர்; போராடும் மக்கள்; 23 தமிழர்களும் கைது!
அட்டப்பள்ள கிராமத்தில் நடப்பது என்ன?

-பாண்டிருப்பு கேதீஸ்-

அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழரின் பூர்வீக கிராமங்களில் ஒன்றான அட்டப்பள்ளம் கிராமத்தில் அம்மக்கள் இறந்தவர்களின் உடல்களை இருநூறு வருடங்களுக்கு மேலாக அடக்கம் செய்துவரும் கிராமத்திற்கு பொதுவான இந்து மயானத்தை முஸ்லிம் பேராசியர் ஒருவர்  ஆவணங்களை புதிதாக தயார் செய்து அபகரிப்பதற்கு எதிராக இக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த காணியை அபகரிக்கும் இந்த முஸ்லிம் பேராசிரியர் முஸ்லிம் அரசியல்வாதியின் உறவினர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்த காலங்களில் திட்டமிட்ட வன்முறைகளாலும் அரசியல் பழிவாங்கல்களாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பல இன்னல்களை சந்தித்த அம்பாறை மாவட்ட தமிழ் கிராமங்களில் அட்டப்பள்ளம் கிராமமும் ஒன்றாகும்.

இன்றும் இவ்வாறான காணி ஆக்கிரமிப்புக்களையும் திட்மிட்ட அடக்குமுறைகளுக்கும் உள்ளாகுவது வேதiனாயன விடயமாகும் அத்தோடு இவ்வாறான சம்பவங்கள் இனங்களுக்கிடையில் மேலும் முரண்பாடுகளையே வளர்க்கும்.

தனிப்பட்ட ஒருவரின் காணி அபகரிப்பு நடவடிக்ககை காரணமாக மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை போராட்டங்களைத் தொடர்ந்து இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 23 பேர் நேற்று 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த மக்கள் சார்பாக சட்டத்தரணிகளான சிவரஞ்சித் மற்றும் ஆர்த்திகா ஆகியோர் ஆஜராகியிருந்தனர். இதில் இரண்டு பெண்கள் மட்டும் நேற்றையதினம் விடுதலை செய்யப்பட்னர் ஏனைய 21 நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காணி அபகரிப்புக்கு எதிராக எதிர்பை வெளிப்படுத்திய மக்களில் 23 நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் இந்த விடயம் தொடர்பாக பேசி ஒரு இணக்கப்பாட்டுடன் தீர்வு காண்பதற்காக பொலிஸார் அழைத்திருந்தனா. பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற மக்கள் மாலை வரை சாப்பாடு தண்ணியின்றி காத்திருந்த பின்னர் இம்மக்கள் மீது நான்கு பரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்படிருக்கின்றார்கள்.

இச்சம்பவம் பல விடயங்களையும் சந்தேகங்களையும் கேள்விகளையும் ஏற்படுத்துகிறன.
பொலிஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது கடமையில் இருந்த பதில்நீதவான் அவர்களால் விசாரிக்கப்பட்டதுடன் இந்த வழக்கில் இறுக்காமான சட்ட விதிகள் தொடர்பாகவும் உள்ளதால் தான் பதில் நீதிபதி என்பதால் மேலும் விசாரணைகள் முடியும்வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதில் இரண்டு பெண்கள் மாத்திரம் விடுதலை செய்யப்பட்டதுடன் ஏனைய 21 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால் காணியை அபகரித்த அந்த நபர் இந்த குழப்பங்களுக்கு மூலகாரணமான அந்த முஸ்லிம் பேராசிரியருக்கு எதிராக அதிகாரிகள்என்ன நடவடிக்கை இதுவரை எடுத்துள்ளார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

கடந்தகாலம் போன்று அரசியல் செல்வாக்குகளை பயன்படுத்தி அம்பாறை மாவட்ட தமிழ் கிராமங்களில் காணிகள் அபகரிக்கப்படுவதற்கும் அதற்கெதிராக போராடும் மக்கள் அடக்கப்படுவதுமான சம்பவங்கள் தொடராமல் இந்த மக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுத்து கைது செய்யப்பட்டவர்களையும் விடுதலை செய்வதற்கும் அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் சிரேஸ்ட சட்டத்தரணிகளும் பொது அமைப்புக்களும் கவனத்தில் எடுத்து துரிதமாக செயற்பட வேண்டியது அவசியமாகும்.

திங்கட்கிழமை (5) முன்நகர்வு மனு சமர்ப்பிக்கப்பட்டு விளக்கமறியலில் உள்ளவர்களை விடுவிக்க எடுக்கப்படும் முயற்சிக்கு எல்லோரும் ஒருமித்து ஒத்துழைப்பு வழங்கி துரிதமாக செயற்பட வேண்டிய தேவை உள்ளது.

அட்டப்பள்ளம் கிராமத்திற்கு சம்பவம் இடம்பெற்றவுடனும்; அதற்கு பின்னரும் அங்கு சென்று மக்களை சந்தித்த கைது செய்யப்பட்ட பின்னர் அவர்களை சென்று பாhத்து ஆறுதவ் கூறிய அரசியல் பிரதிநிதிகள் இதுவரை சம்பவ இடத்திற்கு செல்லாத தமி;ழ் அரசியல்வாதிகள் அனைவரும் ; மக்களை சந்தித்ததுடன் கடமை முடிந்துவிட்டு என்றில்லாமல் இம் மக்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்து செயற்பட வேண்டியதே மிக மிக அவசியமாகும்.

இந்த மக்களை சென்று சந்தித்த அரசியல்வாதிகள் காரைதீவு பிரதேச சபைக்கு தெரிவான ஜெயசிறில் நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜேஸ்வரன் கல்முனை மாநகரசபைக்கு தெரிவான கென்றி மகேந்திரன் சந்தரசேகரம் ராஜன் காத்தமுத்து கணேஸ் கமலதாசன் அத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் கஜேந்திரன் சிறைச்சாலைக்கு சென்று விளக்கமறியலில் உள்ளவர்களை பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுடன் சமூக நல செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், இளைஞர் அமைப்பின் பிரதிநிதிகளும் அட்டப்பள்ளம் கிராமத்திற்கு சென்றிருந்தார்கள்.கடந்த காலங்களிலும் பல இன்னல்களை எதிர் கொண்ட இம்மக்கள் இந்த கைது சம்பவத்தையடுத்து செய்வதறியாது ஒரு அச்சமானதும் குழப்பமானதுமான சூழ்நிலையில் உள்ளார்கள்.   இந்த மக்களின் நியாயமான கோரிக்கைக்கேற்ப அபகரிக்கப்படும் இந்த காணி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வைக்கண்டு முற்றுப்புள்ளி வைப்பதுடன், கைது செய்யப்பட்டவர்களையும் விடுதலை செய்வதற்கும்  பல வழிகளிலும் எல்லோரும்தொடர்ந்து பங்காற்ற வேண்டியது எமது கடமையாகும்.

தமிழ் அரசியல்வாதிகள் சம்பவ இடத்திற்கு சென்றதுடன், கருத்துக்கள் முன்வைத்ததுடன் கடமை முடியவில்லை அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டு இதற்கான தீர்வை இந்த மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்.

 

By admin