கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியமும் பெரியநீலாவணை மாதர்சங்கமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலை மதிய உணவுகளை வழங்கினர்!

சுழ்ல்காற்றால் வீடுகள் பாதிக்கப்பட்டதால் பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கியிருக்கின்றனர். இவர்களுக்கான அவசர உதவிகளை பெரியநீலாவணை இளைஞர்களும் மாதர்சங்கங்களும் கல்முனை இளைஞர் அமைப்புக்களும் வழங்கிவருகின்றனர்.

நேற்று முன்தினம் காலை உணவினை மாநகரசபைக்கு தெரிவான சந்தரசேகரம் ராஜனின் அனுசரணையுடன் கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியம் வழங்கியதுடன் மதிய உணவினை பெரியநீலாவணை 1 B மாதர்அபிவிருத்தி சங்கமும் கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியமும் சமைத்து வழங்கியிருந்தனர்.

மக்களுக்கான அவசர உதவிப்பணியில் பெரியநீலாவணை இளைஞர்கள், மற்றும் கல்முனை பிரதேச இளைஞர்கள் பலரும் ஈடுபட்டுவருகின்றனர்.

By admin