சுழல்காற்றால் பாதிக்கப்பட்ட பெரியநீலாவணை மக்களுக்கு தமிழ் இளைஞர் சேனை 350 அங்கர் பால்மாக்களை வழங்கி வைத்தனர்!

சுழல் காற்றால் பாதிக்கப்பட்டு வீடுகள் சேதமடைந்த நிலையில் பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் தங்கியிருக்கும் மக்களுக்கு கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை 350 அங்கர் பால்மா பைக்கற்களை  நேற்று (2) வழங்கிவைத்தனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு அவர்களின் முயற்சியால் புலம்பெயர் அமைப்பால் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பால்மாக்கள் இளைஞர் சேனை ஊடாக வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

By admin